விமானப் போக்குவரத்து அமைச்சகமானது 2008 ஆம் ஆண்டு விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவின் ஷீரடி விமான நிலையத்தை ஒரு முக்கிய விமான நிலையமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம், விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையமானது (AERA - Airports Economic Regulatory Authority) இந்த விமான நிலையத்தின் வானூர்திச் சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும்.
சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஃபுமியோ கிஷிடா ஜப்பான் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிட் சுகா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஃபுமியோ கிஷிடா பதவி ஏற்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது அறிமுக ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
மகளிர் கிரிக்கெட் அணியானது டி20 பிரிவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அறிமுகமாகிறது.