TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2021 1010 days 547 0
  • இந்திய இரயில்வேயின் பயணிகள் மற்றும் சாதாரண மக்களுக்காக இந்திய இரயில்வே நிர்வாகமானது மும்பையின் மத்திய இரயில் நிலையத்தில் முதல் முறையாக பெட்டகம் போன்ற ஓய்வு அறைகளை உருவாக்கியுள்ளது.
    • இந்தப் பெட்டக வடிவிலான தங்கும் அறையானது  சிறிய படுக்கை அளவிலான பெட்டகங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மலிவு விலையில் ஓர் இரவு தங்கும் வகையிலான  வசதியையும் வழங்குகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஷோம்பி ஷார்ப் என்பவரை இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குடியேற்ற ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.
    • அவர் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை வழி நடத்தச் செய்வதோடு நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான இந்தியத் திட்டங்களுக்காகவும் அவர் பணியாற்றுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்