TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 22 , 2021 1008 days 473 0
  • மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளின் நினைவாகவும் ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவித்தார்.
  • சென்னைப் பெருநகரப் பகுதிக்கான நீடித்த நிலையான நகர்ப்புற சேவைகள் என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது இந்திய அரசிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஹரியானா மாநிலத்தின் மானேசர் நகரில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் (NBRC - National Brain Research Centre) அமைக்கப்பட்டுள்ள உலகின் அதிநவீன, தன்னளவில் முதல் வகையிலான சமீபத்தியத் தொழில்நுட்பங்களுடன் கூடிய MRI மையத்தினை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
  • வங்காள தேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த V. ஜோதி சுரேகா, மகளிர் அணிப் பிரிவில் பட்டம் வென்றார்.
  • உலகக் குடிமக்கள் தினம் என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 அன்று அனுசரிக்கப் படும் ஒரு வருடாந்திரக் கொண்டாட்டம் ஆகும்.
  • சர்வதேச திருநங்கைகள் நினைவு தினமானது, ஆண்டுதோறும் (தொடங்கப் பட்டது முதல்) நவம்பர் 20 ஆம் தேதி அன்று டிரான்ஸ்ஃபோபியா நோயின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்