TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2021 1006 days 504 0
  • துபாயில் நடைபெறும் முதல் சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பிற்குக் கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ராணா சிவக்குமார் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆர்.எம்.கதிரேசன் அவர்களை ஒரு மூன்றாண்டுக் காலத்திற்கு நியமித்து ள்ளார்.
    • சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆளுநர் இருக்கிறார்.
  • வெனிசுலாவில் உள்ள 8,573 இசைக் கலைஞர்கள் சாய்கோவ்ஸ்கியின் "ஸ்லாவோனிக் மார்ச்" (Tchaikovsky's "Slavonic March") என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஒரு இசைக்குழுச் சாதனையை நிகழ்த்தினர்.
    • வெனிசுலாவின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இசைக்குழுவின் தேசிய அமைப்பு "எல் சிஸ்டெமா" என்று அழைக்கப்படுகிறது.
  • 11 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு நிரந்தர ஆணையத்தினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • 2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், இராணுவத்தில் பெண்  அதிகாரிகளுக்கு என்று ஒரு நிரந்தர ஆணையம் நிர்ணயிப்பதை உறுதி செய்யுமாறு உச்சநீ திமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.
  • கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ என்ற புதினத்திற்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது' வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்