TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2021 1001 days 548 0
  • வங்காளதேசத்தின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தான பங்காவாக்ஸ் என்ற மருந்து மனிதர்களுக்கு  செலுத்தப்படுவதற்காக வேண்டி வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
    • பங்காவாக்ஸ் இதற்கு முன்பாக பான்கோவிட் (Bancovid) என்று அழைக்கப்பட்டது.
  • கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீதான 5வது கிழக்காசிய உச்சி மாநாடானது கொல்கத்தாவில் நடத்தப் பட்டது.
    • இந்தியா ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
  • இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் திரு. ரஞ்சன் மதுகல்லே 200 டெஸ்ட் போட்டிகளில் போட்டி நடத்துனராக இருந்த முதல் கிரிக்கெட் போட்டி நடத்துனர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
    • கல்லே என்னுமிடத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தச் சாதனையானது நிகழ்த்தப் பெற்றது.
  • வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்களின் 20வது சந்திப்பில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்குத் தலைமை ஏற்று அவர்களை வழி நடத்தினார்.
    • இந்தச் சந்திப்பானது கசகஸ்தான் நாட்டின் தலைமையில் நூர்-சுல்தான் என்னும இடத்தில் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்