ஐக்கிய அரபு அமீரகமானது 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக வேண்டி பிரான்சுடன் 14 மில்லியன் யூரோஸ் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தினை மேற் கொண்டு உள்ளது.
ரஃபேல் ஜெட் விமானங்களுக்காக இதுவரையில் கையெழுத்தானவற்றுள் ஒரு மிகப்பெரிய சர்வதேச விற்பனை ஒப்பந்தம் இதுவாகும்.
உலக வனவிலங்கு வளங்காப்புத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 அன்று அனுசரிக்கப் படுகிறது.
வேட்டையாடுதல், கடத்தல் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் அருகி வரும் (அ) அழிவின் விளிம்பில் உள்ள இனங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் நாயகர் சௌரவ் கோஷல் மலேசிய ஓபன் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீரர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
இவர் கொலம்பியாவின் மிகுவல் ரோட்ரிகஸ் (Miguel Rodriguez) என்ற வீரரை வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்தார்.