TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2021 994 days 473 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக வேண்டி பிரான்சுடன் 14 மில்லியன் யூரோஸ் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தினை மேற் கொண்டு ள்ளது.
    • ரஃபேல் ஜெட் விமானங்களுக்காக இதுவரையில் கையெழுத்தானவற்றுள் ஒரு மிகப்பெரிய சர்வதேச விற்பனை ஒப்பந்தம் இதுவாகும்.
  • உலக வனவிலங்கு வளங்காப்புத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 அன்று அனுசரிக்கப் படுகிறது.
    • வேட்டையாடுதல், கடத்தல் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் அருகி வரும் (அ) அழிவின் விளிம்பில் உள்ள இனங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் நாயகர் சௌரவ் கோஷல் மலேசிய ஓபன் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீரர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
    • இவர் கொலம்பியாவின் மிகுவல் ரோட்ரிகஸ் (Miguel Rodriguez) என்ற வீரரை வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்