TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 7 , 2021 993 days 605 0
  • தேசிய மாணவர் படையானது “புனீத் சாகர் அபியான்” என்ற ஒரு திட்டத்தின் கீழ், கடற்கரைகளிலிருந்து நெகிழி மற்றும் இதரக் கழிவுகளை அகற்றுவதற்காக  தேசிய அளவிலான ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறது.
    • உள்ளூர் மக்கள் மற்றும் வருங்காலச் சந்ததியினரிடையே தூய்மையான கடற்கரையின் முக்கியத்துவம் குறித்த செய்தியைப் பரப்புவதே இந்த ஒரு மாத கால அளவிலான பிரச்சாரத்தின்  ஒரு நோக்கமாகும்.
  • கட்டிபள்ளி சிவ்பால் என்பவர் ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் குள்ள மனிதர் ஆவார்.
    • இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • சீனா தனது பல பில்லியன் டாலர் மதிப்பிலான மண்டலமற்றும் சாலை என்ற முன்னெடுப்புத் திட்டத்தின், முதலாவது எல்லைக்கு அப்பாற்பட்ட இரயிலை லாவோஸ் நாட்டிலிருந்து இயக்கத் தொடங்கியது.
    • லாவோஸ், தென்கிழக்கு ஆசியாவின் நிலத்தினால் சூழப்பட்ட ஒரே நாடு ஆகும்.
  • தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் ஒன்றிணைந்த ஆந்திரப் பிதேசத்தின் முன்னாள் முதல்வருமான கோனிஜெட்டி ரோசைய்யா ஹைதராபாத்தில் காலமானார்.
    • 88 வயதான ரோசய்யா, காங்கிரசின் மூத்த  தலைவர்களில் ஒருவராவார்.
  • 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 அணு உலைகள் அமைக்கப்படும்.
    • வடக்கு இந்தியாவின் முதல் திட்டமான இந்தப் புதிய அணு உலையானது டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் கோரக்பூரில் அமைக்கப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்