TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2021 990 days 525 0
  • உலகின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான எலைன் ஆஷ் தனது 110வது வயதில் காலமானார்.
    • இவர் (பெண்) 1937 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியில் அறிமுகமானார்.
  • ஜெர்மனியின் புதியப் பிரதமராக (Chancellor) சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) பதவியேற்கவுள்ளார்.
    • ஜெர்மனியின் முதல் பெண் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சிக்கு ஸ்கோல்ஸ் முடிவைக் கொண்டு வருவார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர், அனில் மேனன், நாசாவால் அதன் எதிர்கால விண்வெளிப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புதிய விண்வெளி வீரர்களில் ஒருவராவார்.
  • தென் அமெரிக்காவில், Flatbill flycatchers என்ற ஒரு புதிய பறவை இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டும் இணைந்து 150 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்