TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2021 987 days 588 0
  • மாற்றுத் திறனாளிகளின் திருமணங்களை கோவில்களில் இலவசமாக நடத்துவதற்கு அனுமதி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குப் பொருந்தும்.
  • பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல பொது மக்களின் உயிரைப் பலி வாங்கியது தொடர்பாக மத்திய அரசிற்கும் நாகாலாந்து மாநில அரசிற்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு காரணம் கோரும் அறிவிப்பினை (நோட்டீஸ்) அனுப்பியது.
    • இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய இராணுவத் துறைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், நாகாலாந்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அம்மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு அந்த ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.
  • பிரபாத் குமார் எழுதிய “Public Service Ethics – A Quest for Naitik Bharat” என்ற புத்தகத்தினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.
    • இப்புத்தகமானது நெறிமுறைக் கொள்கைகளை வாழ்க்கையின் நடைமுறையாக பின்பற்றும் மனித குணத்தின் பல பரிமாணங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்