TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2021 984 days 549 0
  • பருவநிலை மாற்றத்தினைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கான ஐ.நாவின் ஒரு வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
    • இந்த வரைவுத் தீர்மானமானது நைஜர் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளினால்  இணைந்து தாக்கல் செய்யப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தினக் கொண்டாட்டங்களில் ஒரு முதன்மை விருந்தினராகப் பங்கேற்பதற்கு கசகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    • குடியரசுத் தின விழாவில் 5 மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் விருந்தினராக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
  • சவுதி அரேபியா, அல் அஹ்பாப் எனப்படும் தப்லிகி மற்றும் தாவா என்ற குழுவை ‘சமூகத்திற்கு ஆபத்தானது’ எனக் கூறி தடை செய்துள்ளது.
  • டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டைம் இதழில் ‘2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.
    • மஸ்க், ஸ்பேஸ் X எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியும் ஆவார்.
  • சர்வதேச கடல்சார் அமைப்பு சபைக்கு B நாடுகள் என்ற பிரிவில் 2022-23 ஆகிய இரு ஆண்டுகளுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
    • லண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்தச் சபையானது சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாக அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்