TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2021 981 days 554 0
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது நாட்டின் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்காக ஒரு குழுவினை அமைத்துள்ளது.
    • அதன் தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஒரு முன் மொழிதலுக்கு அனுமதி வழங்கியது.
  • பிரஞ்சு பேஷன் ஹவுஸ் என்ற ஒரு தொலைக்காட்சி நிறுவனமானது லீனா நாயர் என்பவரை தனது புதிய உலகத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.
    • இவர் இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் நாட்டவராவார்.
  • மணிப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12 அன்று நுபி லால் என்ற ஒரு தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • பிரிட்டிஷ் காலனிய ஆட்சியினை எதிர்த்து நீதி வேண்டி போராடிய மணிப்பூரின் துணிச்சல்மிக்க பெண்மணிகளுக்கு மகத்தான ஒரு அஞ்சலியினை செலுத்திட வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அதிக பட்சப் பயனாளிகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா (0.64 மில்லியன்) முதல் இடத்தில் இருக்கின்றது
    • இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (0.53 மில்லியன்), குஜராத் (0.44 மில்லியன்), கர்நாடகா (0.32 மில்லியன்) மற்றும் உத்தரப் பிரதேசம் (0.27 மில்லியன்) ஆகிய மாநிலங்களும் கடைசி இடத்தில் வெறும் 43 பயனாளிகளுடன் நாகாலாந்து மாநிலமும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்