TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2021 979 days 517 0
  • இந்தியாவில் குறைகடத்திகள் மற்றும் காட்சித் திரை ஆகியவற்றின் உற்பத்தியை (semiconductor and display manufacturing) அதிகரிப்பதற்காக 76,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை  என்ற ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இத்துடன், மின்னணுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையானது ரூ.2.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களிலுள்ள இளைஞர்களின் ஆர்வத்தினைப் பயன்படுத்துவதற்கான விளையாட்டுத் துறை சார்ந்த நடவடிக்கைகள் (SAHAY - Sports Action toward Harnessing Aspiration of Youth) என்ற ஒரு திட்டத்தினை ஜார்க்கண்ட் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
    • இத்திட்டமானது திறமையுள்ள இளம் விளையாட்டு வீரர்களை மேன்மையடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி விருது விழாவில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேக்ரா “சிறந்த அறிமுக வீராங்கனை” என்ற விருதைப் பெற்றார்.
    • டோக்கியோ போட்டிகளில் தங்கப் பத்தகத்தை வென்ற அவரது சாதனைக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • ஹூண்டாய் இந்தியா நிறுவனமானது உன்ஷோ கிம் என்பவரை தனது புதிய நிர்வாக இயக்குநராக நியமித்தது.
    • சியோன் சியோப் கிம் என்பவரிடமிருந்து இவர் பொறுப்புகளை ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்