TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2021 975 days 477 0
  • 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான பெரிய வங்கிகளின் பட்டியலில் ஒட்டு மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முதலிடத்தை பாங்க் ஆஃப் பரோடா பெற்றுள்ளது.
    • டிஜிட்டல் பணவழங்கீட்டுகளுக்கான உத்சவ் கொண்டாட்டத்தின் போது இந்த வங்கிக்கு 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளுக்காக டிஜி தான் என்ற விருதுகள் வழங்கப் பட்டுள்ளளன.
  • வரகுக் கோழி என்ற பறவையின் மிக நீளமான உள்நாட்டு இடம்பெயர்வு  வழித் தடமானது இராஜஸ்தான் முதல் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் வரையில் நீள்வதாக முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
    • வரகுக் கோழியானது கானமயில் இனத்தைச் சேர்ந்த அருகி வரும் இனமாகும்.
  • O.P. ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகமானது டைம்ஸ் உயர்கல்வி இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆசிய விருதுகள் வழங்கும் விழாவில் “ஆண்டின் சிறந்த டிஜிட்டல் புதுமை” என்ற விருதினைப் பெற்றுள்ளது.
    • இந்த விருதிற்குத் தேர்வான ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
  • கொலம்பியப் பத்திரிகைக் கல்வி நிறுவனமானது தி இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதி அவர்களை 2022 ஆம் ஆண்டிற்கான தனது முன்னாள் மாணவர் விருதினைப் பெறுபவர்களுள் ஒருவராக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்