TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 2 , 2022 966 days 583 0
  • உலகின் மிக நீளமான மெட்ரோ இரயில் பாதையானது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் திறக்கப்பட்டது.
    • இதன் மூலம், உலகளவில் மிகப்பெரிய மெட்ரோ  இரயில் கட்டமைப்பினைக் கொண்ட நகரமாக ஷாங்காய் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
  • சிக்கிமில் உள்ள சோம்கோ ஏரியையும் நாதுலா எல்லைக் கணவாயையும் கேங்டாக் நகரத்துடன் இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது சாலைக்கு ‘நரேந்திர மோடி மார்க்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
    • இதன் பழைய பாதையானது ஜவஹர்லால் நேரு சாலை என்று அழைக்கப் படுகிறது.
  • இந்தியாவில் வீடுகள் வாங்குவது போன்றே அசையா சொத்துகளையும் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இனி  முன் அனுமதி பெற தேவையில்லை.
    • இதை இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
  • ஜப்பானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நோபுவோ கிஷி சீனாவுடனான இராணுவ அவசர அழைப்பு எண்ணினை உருவாக்குவதற்கு ஒப்புக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்