TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2022 950 days 491 0
  • 20வது டாக்கா சர்வதேசத் திரைப்பட விழாவானது வங்காள தேசத்தின் டாக்கா நகரில் தொடங்கியது.
    • இந்த விழாவின் போது, ‘திரைத்துரையில் பெண்கள்’ என்ற சர்வதேச மாநாட்டின் 8வது பதிப்பும், ‘வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்’ (கிழக்கைச் சந்திக்கும் மேற்கு) திரைக்கதை ஆய்வகத்தின் 4வது பதிப்பும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  • இலங்கையில் வெகுவாகக் குறைந்துள்ள அந்நியச் செலாவணி இருப்புகள் மற்றும் உணவு இறக்குமதிக்கு உதவுவதற்காக 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
    • இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் இந்தியா தனது உதவியை வழங்குகிறது.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது சமீபத்தில் தனி மகளிர் காவல் படைப் பிரிவு என்ற ஒரு படைப் பிரிவினை உருவாக்கியுள்ளது.
    • இந்த மகளிர் காவல் படையினர், மகிளா காவல் சின்னம் என்ற ஒரு சிறப்பான தனிப்பட்டச் சின்னத்தை அணிவார்கள்.
  • பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடியை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    • இது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி ஆகிய துறைகளில், குறிப்பாக மாவட்ட அளவிலான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப் படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்