TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 27 , 2022 941 days 525 0
  • 20வது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் இந்தியாவின் கூழாங்கல் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.
    • இந்தத் திரைப்படத்தினை P.S. வினோத்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
  • இந்தியாவில் வாழும் 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் 67 சதவீதத்தினரும், 58 சதவீத இளையோர்களும் பருவநிலை மாற்றத்தை ஓர் உலகளாவிய அவசர நிலை என்று கருதுகின்றனர்.
    • இது  2021 ஆம் ஆண்டிற்கான G20 மக்களின் பருவநிலை வாக்கு  என்ற ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது சேவை மையம் ஆனது சமீபத்தில் யோக்யதா என்ற ஒரு கைபேசிச் செயலியை அறிமுகப் படுத்தியது.
    • கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதே இந்தச் செயலியின் நோக்கமாகும்.
  • ரத்தன் டாடாவுக்கு அசாம் மாநில அரசு தனது உயரிய விருதான ‘அசாம் பைபவ்’ என்ற விருதை வழங்கியது.
    • இது அசாம் மாநிலத்தின் ஒரு உயரியக் குடிமை விருது ஆகும்.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தனது செயற்கை நுண்ணறிவு மீக்கணினியானது 2022 ஆம் ஆண்டின் மத்தியில் உலகின் அதிவேக கணினியாகத் திகழும் என  மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக்கின் மூல நிறுவனம் ஆகும்.
  • இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற 9வது தேசிய மகளிர் பனிக்கட்டி மைதான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் லடாக்கை சேர்ந்த மகளிர் அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்