TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 31 , 2022 937 days 475 0
  • இந்திய அரசானது டாக்டர் V. ஆனந்த நாகேஷ்வரனை புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமித்துள்ளது.
    • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று K.V. சுப்பிரமணியன் இந்தப் பதவியில் இருந்து விலகியதில் இருந்து இந்தப் பதவி நிரப்பப் படாமல் உள்ளது.
  • மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா, “டிஜிட்டல் சன்சத் செயலி” எனப்படும் பாராளுமன்றத்தின் அதிகாரப் பூர்வ கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தினார்.
    • 2022 ஆம்  ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் உட்பட பாராளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் குடிமக்கள் நேரடியாக காண்பதற்கு இந்தச் செயலி வழி வகுக்கும்.
  • உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தில் சமீபத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டது.
    • சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது ஓர் அரிய நிகழ்வாகும்.
  • கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய இரண்டையும் நடத்த உள்ள முதல் நாடு சீனாவாகும்.
    • 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக செயற்கைப் பனித் துளிகளை சீனா உருவாக்கி வருகிறது.
  • மஸ்கட் நாட்டில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஹாக்கி மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை வீழ்த்தி ஜப்பான் அணி வென்றுள்ளது.
    • சீன அணியை வீழ்த்திய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்