TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2022 930 days 569 0
  • கடல் பரப்பில் இயங்கக்கூடிய ரஃபேல் வகை போர் விமானமானது, சமீபத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் வைத்துப் பரிசோதிக்கப்பட்டது.
    • ஒரு விமானந் தாங்கிக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றது.
  • பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை கொங்குர்ஸ்-எம் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • இந்த ஒப்பந்தமானது மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
  • இந்திய அரசானது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான M.ஜெகதேஷ் குமாரைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
    • இவர் ஐந்து வருடக் காலத்திற்கு அல்லது 65 வயதை அடையும் வரை இவற்றுள் எது முன்னதோ அதுவரையில் அந்தப் பதவியினை வகிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்