TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 8 , 2022 929 days 466 0
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றமானது, அம்மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களில் ஹரியானா மாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பிற்கான  75% இட ஒதுக்கீட்டினை வழங்கும் ஒரு சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது.
  • T20I கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட் எடுத்த முதல் மேற்கு இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை  ஜேசன் ஹோல்டர் பெற்றார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
  • ஐக்கிய அரபு அமீரகமானது முதல்முறையாக தொடங்கப்படும் வணிகங்களின் லாபங்கள் மீது கூட்டுப் பெருநிறுவன வரியை அறிமுகம் செய்ய  (விதிக்க) உள்ளது.
    • இயற்கை வளங்களை அகழ்ந்து எடுக்கும் நிறுவனங்களைத் தவிர அந்நாட்டின் அனைத்துப் பெரு நிறுவனங்களின் மீதும் வர்த்தக நடவடிக்கைகளின் மீதும் இது விதிக்கப் படும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்