TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2022 920 days 500 0
  • பில் கேட்ஸ் எழுதியுள்ள “How to prevent the Next Pandemic’ என்ற புத்தகமானது 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியாக உள்ளது.
    • இவரது முந்தையப் புத்தகமான “How to Avoid a Climate disaster: The solution we Have and the Breakthroughs we Need” 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது.
  • டெல்லியின் கிசான்கஞ்ச் எனுமிடத்தில் உள்ள இந்திய இரயில்வே வளாகத்தில் நவீன மல்யுத்தப் பயிற்சி நிறுவனத்தினை நிறுவதற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இது இந்தியாவிலேயே மிகப்பெரிய மல்யுத்தப் பயிற்சி நிறுவனமாக திகழும்.
  • சௌபாக்யா என்ற ஒரு திட்டத்தின் கீழ், இராஜஸ்தான் மாநிலம் சூரியசக்தியை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை அமைப்பின் மூலம் மின்சாரத்தைப் பெறும் வீடுகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது.
    • இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மலைப்பாங்கான மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றில் இந்த முன்னெடுப்பின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் யாரும் இல்லை.
  • இணைய விளையாட்டுகளைத் தடை செய்த 2021 ஆம் ஆண்டின் கர்நாடக காவல் துறை (திருத்தம்) சட்டத்தின் விதிகளை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    • தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி மற்றும் நீதிபதி கிருஷ்ணா S. தீக்சித் ஆகியோரின் தலைமையிலாபிரிவு அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்