TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2022 909 days 447 0
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒன்றிய சட்டத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் நீதிபதியாக அனூப் குமார் மெந்திரட்டா உருவெடுத்தார்.
    • இவர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று, உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் ஒன்றிய சட்டத் துறைச் செயலாளர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
  • இந்தியாவின் முதல் மின்னணுக் கழிவுச் சுற்றுச்சூழல் பூங்கா டெல்லியில் நிறுவப்பட உள்ளது.
    • இது அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதற்கான ஒரு முயற்சி ஆகும்.
  • எம்னாதி என்ற புயல் மடகாஸ்கர் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது.
    • இது அந்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான மனகராவிற்கு வடக்கே கரையைக் கடந்தது.
  • உயிரி மருத்துவப் புத்தாக்க மற்றும் தொழில்முனைவுக்கான தேசியக் கொள்கை வழிகாட்டுதல்களை சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புது தில்லியில் வெளியிட்டார்.
    • இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம், மனித சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் இறுதிக் குறிக்கோளுடன் புத்தாக்கங்கள் நிறைந்த ஒரு தொழில் முனைவோர் சூழலை இந்தியாவில் உருவாக்குவதேயாகும்.
  • சர்வதேச துருவ கரடி தினமானது பிப்ரவரி 27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
    • துருவ கரடிகளைப் பாதுகாப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்