TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2022 901 days 496 0
  • ரஷ்யப் படைகள், தெற்கு உக்ரைனிலுள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரத்தினைக் கைப்பற்றி ள்ளன.
    • ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட முதல் பெரிய நகரம் கெர்சன் ஆகும்.
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது, தனது புதிய வளர்ந்து வரும் இயங்குதிறன் கண்டுபிடிப்புகள் மற்றும் வரவிருக்கும் மின்சார வாகனங்கள் தயாரிப்பிற்காக ‘விடா’ எனப்படும் புதிய தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
    • இது துபாய் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (விடா என்றால் வாழ்க்கை என்று பொருள்)
  • எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியின் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் குழுப்போட்டியில் இந்தியாவின் ஸ்ரீநிவேதா, ஈஷா சிங் மற்றும் ருச்சிதா விநேர்கர் ஆகியோர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.
    • இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட மூன்று பதக்கங்களுடன் இந்தப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்