TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2022 898 days 520 0
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலுள்ள ராயல் மெல்போர்ன் தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த முப்பரிமாண அச்சிடல் முறையிலான வினையூக்கியை உருவாக்கியுள்ளனர்.
    • மீயொலி விமானத்திலுள்ள அதிவெப்பமடைதல் பிரச்சினையைத் தீர்ப்பதே இந்த முப்பரிமாண அச்சிடல் முறையிலான வினையூக்கிகளின் முக்கியப் பயன்பாடு ஆகும்.
  • தலித் பந்து என்பது தெலுங்கானா அரசின் முதன்மைத் திட்டமாகும்.
    • இது அந்த மாநிலத்திலுள்ள தலித் குடும்பத்தினருக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு நலத் திட்டமாக இருப்பதோடு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நேரடி பயன் பரிமாற்றத் தொகையை வழங்குவதன் மூலம் அவர்களிடையே உள்ள தொழில் முனைவோரை வெளிக்கொணர்வதற்கும் வேண்டி இது உதவும்.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களாலேயே இயக்கப்படும் FLO தொழில்துறைப் பூங்கா எனப் பெயரிடப்பட்ட ஒரு தொழில்துறைப் பூங்காவானது தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்