TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2022 897 days 473 0
  • தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகளின் பெயரில் மட்டுமே வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமானது முன்னதாக குடிசை மாற்று வாரியம் என அழைக்கப்பட்டது.
  • வீரமங்கை வேலுநாச்சியார் பெயரிலான விருதானது தகுதி வாய்ந்த மாணவிகளுக்கு வழங்கப் படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு WAN-IFRA தெற்காசிய டிஜிட்டல் ஊடக விருது விழாவில், இந்துக் குழுமம் தொடர்ந்து 2வது ஆண்டாக, “ஆண்டின் சிறந்தப் பதிப்பாளர் நிறுவனம்” என்ற ஒரு விருதினைப் பெற்றுள்ளது.
    • உலகப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் சங்கமானது உலகப் பத்திரிகை நிறுவனங்களின் ஒரு உலக அமைப்பாகும்.
  • இந்த ஆண்டு முழுவதும் தான் பங்கு பெறும் டென்னிஸ் போட்டிகளில் பெறும் பரிசுத் தொகையை உக்ரைனுக்கான UNICEF நிதிக்கு வழங்குவதாக ஆன்டி முர்ரே என்பவர் கூறிள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்