TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2022 896 days 493 0
  • SKOCH என்ற ஆளுகை நிலைமைக்கானத் தரவரிசையில் தொடர்ந்து 2வது ஆண்டாக ஆந்திரப் பிரதேசம் தனது முதல் இடத்தினைத் தக்க வைத்துள்ளது.  
    • இதில் மேற்கு வங்காளம் 2வது இடத்திலும் ஒடிசா 3வது இடத்திலும் உள்ளது.
  • முதல்முறையாக ஜெய்ப்பூர் – டெல்லி – ஆக்ரா – நெடுஞ்சாலையில் பசுமை மின்னேற்ற மையத்தினை மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலை அமைப்பானது கட்டமைத்து வருகிறது.  
    • மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலை அமைப்பானது நாட்டின் போக்குவரத்து அமைப்புகளின் மின்மயமாக்கலை மேம்படுத்துவதற்கான ஒரு அமைப்பாகும்.
  • மும்பையில், ஜியோ உலக மையத்தினை நிறுவ உள்ளதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  
    • இது ஒரு வணிகம், வர்த்தகம் மற்றும் கலாச்சார மையமாக செயல்பட உள்ளது. 
  • அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் போஜ்பூரி மொழியைச் சேர்ப்பதற்கான ஒரு நீண்ட கால கோரிக்கையை தமது அரசாங்கம் மீண்டும் வற்புறுத்தத் தொடங்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
    • அந்த மாநில அமைச்சரவையானது இது தொடர்பான ஒரு முன்மொழிதலை 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசிற்கு அனுப்பியது.
  • பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ் உலக கோல்ப் புகழ் மன்றத்தில் (World Golf Hall of Fame) சேர்க்கப்பட்டுள்ளார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்