TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 16 , 2022 893 days 459 0
  • அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் 11வது கேல் மஹாகும்ப் என்ற போட்டியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
    • கேல் மஹாகும்ப் என்ற போட்டியின் இந்தப் பதிப்பில் 36 பொதுப் பிரிவு விளையாட்டுகளும் 26 பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) விளையாட்டுகளும் அடங்கும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கிக்கு "2020-21 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த செயல் திறனுக்கான தேசிய விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • சுய உதவிக் குழுவின் வங்கிக்கான இணைப்பில் அதன் சிறந்த செயல்திறனுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் மெய்நிகர் திறன்மிக்க கட்டமைப்பு அறிவு மையமானது ஹரியானா மாநிலத்தில் உள்ள மனேசரில் திறக்கப்பட்டது.
  • இந்தியாவின் பங்குச் சந்தையானது சந்தை மூலதனத்தில் முதன்முறையாக உலகின் ஐந்தாவது இடத்தை எட்டியது.
    • தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்