TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2022 890 days 423 0
  • சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினைக் குறிக்கும் வகையில் மடகாஸ்கரில் மகாத்மா காந்தி பசுமை முக்கோணமானது திறக்கப்பட்டுள்ளது.
    • இந்த முக்கோணத்திலுள்ள பசுமை என்ற வார்த்தையானது நிலையான மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மீதான அந்நாட்டின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
  • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேம்படுத்தப்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் கலன் பொருத்தப்பட்ட ஒரு மின்சார வாகனமான டொயோட்டா மிராய் என்ற ஒரு மகிழுந்தினை புதுடெல்லியில் அறிமுகப்படுத்தினார்.
    • டொயோட்டா மிராய் என்பது முழுவதும் ஹைட்ரஜனால் ஆற்றலூட்டப்பட்ட இந்தியாவின் முதலாவது எரிபொருள் கலன் பொருத்தப்பட்ட ஒரு மின்சார வாகனமாகும்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது, தனது புதிய சிறுசெயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் திட எரிபொருள் சார்ந்த உந்துநிலையின் ஒரு நிலமட்டச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்த சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
    • ரஷ்யா தனது தாக்குதலை பிப்ரவரி 24 அன்று தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்