TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2018 2239 days 719 0
  • டாடா அறக்கட்டளையினர் சத்தீஸ்கரில் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சிக்கான உதவிகளை அளிக்க அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த எட்டு மாவட்டங்களும் நிதி ஆயோக்கின் உயர் லட்சிய மாவட்டங்களாக மாற்றப்படும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்திய கடற்படையானது தரையிறங்கு ஊர்தி பயன்பாட்டுக் கப்பலான MK IV LCU L54 என்ற கப்பலை அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் கடற்படையில் சேர்ந்துள்ளது. கடற்படையில் சேர்க்கப்பட உள்ள மொத்தம் 8 Mark IV தரையறங்கு ஊர்தி பயன்பாட்டுக் கப்பல்களில் இது நான்காவது கப்பலாகும்.
  • 2018ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ள நான்காவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வானது உத்தரகாண்டில் உள்ள டெஹ்ராடூனில் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்