TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 22 , 2022 887 days 500 0
  • ஈரானின் புத்தாண்டான சர்வதேச நவ்ரூஸ் தினம் என்பது மார்ச் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
    • நவ்ரூஸ் என்பது வசந்த காலத்தின் முதல் நாளைக் குறிக்கச் செய்வதோடு இந்தத் தினமானது வானியல் இளவேனிற் சம இரவு நாளில் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியக் கடலோரக் காவல்படையின் ஐந்தாவது கடல் ரோந்துக் கப்பலான ‘சாக்சம்’ என்ற கப்பலை கோவாவில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார் படையில் இணைத்தார்.
    • 105 மீட்டர் நீளமான இந்த கடல் ரோந்துக் கப்பலானது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
  • 2வது இந்தியா-இந்தோனேசியா நாடுகளுக்கிடையே பாதுகாப்புப் பேச்சுவார்த்தை ஜகார்த்தா நகரில் நடத்தப் பட்டது.
    • இந்தோனேசியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் முகமது மஹ்ஃபுத் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இணைந்து இதற்குத் தலைமை தாங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்