TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 11 , 2022 833 days 403 0
  • அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவையானது, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட உள்ள முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக, கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட உள்ளதை உறுதிப் படுத்தியது.
  • மிகவும் அதிகளவில் பரவக்கூடிய XE என்ற கொரோனா வைரஸ் திரிபின் முதல் தொற்றானது இந்தியாவின் மும்பை நகரில் பதிவாகியுள்ளதாக அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை நகரத்திற்குப் பயணம் மேற்கொண்ட 50 வயதுப் பெண்ணிடம் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு ஓமிக்ரான் திரிபின் கலப்பின வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது.
  • ஹாலிவுட் திரைப்பட அகாடமியானது, வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
    • அவர் கடந்த அகாடமி விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்ததையடுத்து இந்த ஒரு நடவடிக்கையானது மேற் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்