பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana -PMGSY) ஊரக சாலை திட்டத்திற்கு கூடுதல் நிதியினை வழங்குவதற்காக இந்தியாவும், உலக வங்கியும் 500 மில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்- Vayu Bhawan) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் முதல் இந்திய விமானப்படை தளபதிகள் (biannual IAF Commanders' Conference of 2018) மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரான அபிஷேக் மனு சிங்வி எழுதிய ”Straight talk” எனும் புத்தகத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.