TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 14 , 2022 830 days 442 0
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் WSF உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை அணியினரான தீபிகா பலிக்கல் கார்த்திக் மற்றும் சவுரவ் கோசல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    • WSF உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் இந்திய நாட்டினால் நடத்தப்பட உள்ள G20 உச்சி மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளராக, வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக இந்தப் பதவியினை அரசு புதிதாக உருவாக்கியுள்ளது.
  • இந்தியக் கடலோரக் காவற்படையானது MK III எனப்படும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) அடங்கிய படைப் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளது.
    • இது கடல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.
  • உமியா மாதா கோவிலின் 14வது நிறுவன தினத்தன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
    • உமியா மாதா கோயிலானது குஜராத்தின் ஜூனாகத் என்னுமிடத்தில் உள்ள ஒரு சமயத் தலமாகும்.
  • சமையல் எண்ணெய் விற்பனை நிறுவனமான ருச்சி சோயா, தனது நிறுவனத்தின் பெயரை பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் என மாற்றுவதற்கு அந்த நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்