TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2022 821 days 437 0
  • பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய நபர்களுக்கான பிரதமர் மந்திரியின் விருதுகளை புது டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
    • குடிமைப் பணி தினத்தை (ஏப்ரல் 21) முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • தமிழகத்தின் 4 மண்டலங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்களை நிறுவுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    • சட்ட சபையில் 110வது விதியின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இந்தியப் பிரீமியர் லீக் போட்டியானது 2023 ஆம் ஆண்டில் தொடங்க உள்ளது.
    • தொடக்கப் போட்டித் தொடரில், முகமை அடிப்படையிலான அமைப்பான இந்தப் போட்டியானது, 6 அணிகளைக் கொண்டிருக்கும்.
  • ப்ராக்டர் & கேம்பிள் என்ற இந்திய நிறுவனமானது, இந்தோனேசியாவில் அதன் வணிகத்தினை மேற்கொண்டு வழி நடத்திய L.V.  வைத்தியநாதன்  என்பவரை தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
    • இதன் தாய் நிறுவனத்தின் ஒரு புதியப் பொறுப்பினை மதுசூதன் கோபாலன் என்பவர் ஏற்க உள்ளதால், அவரையடுத்து வைத்தியநாதன் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
  • டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனமானது, ஜஸ்லீன் கோலி என்பவரைத் தனது புதிய மேலாண்மை இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
    • இவர் விஜய் குமார் என்பவரையடுத்து இப்பதவியினை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்