TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2022 820 days 413 0
  • ஆசிய ஆப்பிரிக்கக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய சர்வதேச மாநாட்டில், தொழிலதிபர் பபிதா சிங் உலக அமைதித் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவை மூலம் அமைதியை மேம்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, உலகில் இரண்டாவது அதிகம் பேசப் படும் மொழியான ஸ்பானிய மொழியைக் கொண்டாடும் விதமாக ஸ்பானிய மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
    • மிகவும் புகழ்பெற்ற ஒரு ஸ்பானிய எழுத்தாளரான மிகுவல் டி செர்வாண்டஸ் சாவேத்ராவை (Miguel De Cervantes Saavedra) கௌரவிக்கும் விதமாகவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தின் வடோதரா அருகே உள்ள ஹலோல் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஏற்றுமதியை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட JCB நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.
    • இந்தத் தொழிற்சாலை உலகளாவிய உற்பத்திகளுக்கான பாகங்களை தயாரிக்கச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்