தேசிய சுகாதார இயக்கத்தின் 2021-22 ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ என்ற திட்டத்தில் மாநில அளவில் ‘தூய்மையான மருத்துவமனை’ என்ற ஒரு பிரிவில் மணப்பாறை அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றது.
டாடா சன்ஸ் குழுமத்தின் செயல் தலைவர் N. சந்திரசேகரன், டாடா டிஜிட்டல் நிறுவனத் தலைவராக அதிகாரப் பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
அயல்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டுவதற்கான எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த நியமனமானது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.