24 காரட் தங்க நகைகளுக்கு தர நிர்ணய மதிப்பீட்டினை (ஹால் மார்க்) கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் அடிப்படையில் 24 காரட் தங்க நகைகளுக்கும் தர மதிப்பீடுகளை வகுக்க இந்திய தர சான்று நிறுவனத்திற்க்கு (BIS – Bureau of Indian standards) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது நடப்பில் 14, 18, 22 காரட் தங்கத்தில் செய்யப்படும் நகைகளுக்கு மட்டுமே தர நிர்ணய மதிப்பீடு வழங்கப்படுகின்றது.
அகதிகள் தங்கள் பெயரை தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் சேர்ப்பதற்கு கிராம நிர்வாகம் அளித்த இருப்பிடச் சான்றிதழ்களை தகுதியான ஆவணமாக அளித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவையாவும் துணை ஆவணங்கள் என்றும் மத்திய அரசால் வழங்கப் பெறும் ஆவணங்களே பிரதான ஆவணங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அவையே தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பெயர் சேர்ப்பதற்கு தகுதியானவை என விளக்கமளித்துள்ளது.