TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 6 , 2022 808 days 485 0
  • எந்தவொரு தனிநபரையும் தடுப்பூசி போடுவதற்கு கட்டாயப்படுத்த கூடாது என்றும், அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவின் கீழ் ஒரு நபரின் உடல் மீது அவர் கொண்டுள்ள கண்ணியம் அவரது உரிமை என்றும், இது தடுப்பூசியை மறுக்கும் ஒரு உரிமையையும் உள்ளடக்கியது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது கணக்குத் தொகுப்புச் சூழல் அமைவில் செயல்படத் தொடங்கிய  முதல் பொதுத்துறை வங்கி ஆக மாறியது.
  • ஸ்பான்யோல் என்ற அணிக்கு எதிராக நடைபெற்ற 35வது ஸ்பானிஷ் லீக் கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் என்ற அணி வெற்றி பெற்றது.
  • ரோனி ஓ சுல்லிவன் தனது ஏழாவது உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார்.
    • இதன் மூலம், 1999 ஆம் ஆண்டில் ஏழு உலக ஸ்னூக்கர் பட்டங்களை வென்ற ஸ்டீபன் ஹென்ட்ரியின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
  • ஓபன் எனப்படும் ஒரு புதிய வணிகமுறை நிதித் தொழில்நுட்பத் தளமானது, அதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்த்துவதற்காக புதிய மூலதனத்தை திரட்டியதைத் தொடர்ந்து இந்தியாவின் 100வது யூனிகார்ன் நிறுவனமாக இது மாறி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்