TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2022 802 days 475 0
  • தங்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கைதிகளுக்குத் தற்காலிக விடுப்பு வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், 1982 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தின் விதியைத் திருத்தி அமைப்பதற்கான ஒரு சட்ட மசோதாவினைத் தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
  • அதானி வில்மர் லிமிடெட் என்ற நிறுவனமானது, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் என்ற நிறுவனத்தை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய அதிகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் நிறுவனமாக மாறியது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘INDO-PAK WAR 1971- Reminiscences of Air Warriors’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • சந்தூர் வித்வான் பண்டிட் ஷிவ்குமார் சர்மா சமீபத்தில் காலமானார்.
    • இவர் 1991 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினையும் 2001 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதினையும் பெற்றவர் ஆவார்.
  • அயோத்தி நகரில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கடவுப் பாதை உருவாக்கப்பட்டு, அதற்கு மறைந்த புகழ்பெற்றப் பாடகி பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவாக பெயரிடப் படும்.
  • இந்திய உணவு மற்றும் சுற்றுலாச் சேவைக் கழகமானது தனது முதலாவது  பாரத் கௌரவ் சுற்றுலா இரயிலை நேபாளத்தின் ஜனக்பூரில் ஒரு நிறுத்தத்துடன் இயக்கத் தொடங்கியுள்ளது.
    • இந்த இரயில் ஸ்வதேஷ் தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள இராமாயண வட்டாரப் பகுதியைச் சுற்றியப்  பகுதிகளில் இயக்கப்படும்.
  • இந்தியாவின் அவினாஷ் சேபிள், 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பகதூர் பிரசாத் 1992 ஆம் ஆண்டு படைத்திருந்த ஒரு 30 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்து, ஒரு புதிய தேசியச் சாதனையைப் படைத்தார்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாயானது 2022 ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டி, இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • தற்போது நடைபெற்று வரும் 24வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவினைச் சேர்ந்த அபினவ் தேஷ்வால் இந்தியாவிற்கான இரண்டாவது தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • நான்காவது AFI இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று உத்தரப் பிரதேசத் தடகள வீராங்கனை அன்னு ராணி தான் படைத்த சொந்தத் தேசியச் சாதனையை முறியடித்தார்.
  • புகழ்பெற்ற ஒடியா இலக்கிய எழுத்தாளர் ரஜத் குமார் கர் சமீபத்தில் காலமானார்.
    • இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக 2021 ஆம் ஆண்டில் இவர் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.
  • F1 பந்தய உலகச் சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டெப்பன் 2022 ஆம் ஆண்டு தொடக்க மியாமி கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்