TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2022 798 days 375 0
  • கோவிட்-19 தொடர்பாக அமெரிக்கா நடத்திய இரண்டாவது உலகளாவிய காணொளி வாயிலான உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
  • இம்பாலில் உள்ள குமான் லம்பாக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 12வது இந்திய சப்-ஜூனியர் (மிக இளையோருக்கான) தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் (2022) போட்டியை மணிப்பூர் முதல்வர் N.பிரேன் சிங் தொடங்கி வைத்தார்.
  • மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா நினைவுச் சின்னம் தொடர்பான சர்ச்சை குறித்த மனு மீது இந்தியத் தொல்லியல் துறை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.
    • போஜ்ஷாலா என்பது வாக்தேவியின் (சரஸ்வதி தேவி) கோவில் என்று இந்துக்கள் கூறும் சமயத்தில் முஸ்லீம் சமூகத்தினர் இதனைக் கமல் மௌலா மசூதியாகக் கருதுகின்ற வகையில் இது இந்தியத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஒரு நினைவுச் சின்னமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்