TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2022 793 days 399 0
  • இண்டர் குளோப் எனப்படும் வான்வழிப் போக்குவரத்து (இண்டிகோ) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவானது, பீட்டர் எல்பர்ஸை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
  • முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோரா, கிராம் உன்னதி வாரியத்தின் புதிய நிர்வாகம் சாரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வரலாற்றில் முதன்முறையாக, 96 வயதான இராணி எலிசபெத்துக்குப் பதிலாக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து பாராளுமன்றத் கூட்டத்தின் தொடக்க விழாவில் வழக்கமாக இராணி வழங்கும் உரையை வழங்கினார்.
  • ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹோல்சிம் எனப்படும் பன்னாட்டு நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களின் மீது கொண்டுள்ள பங்குகளை அதானி குழுமம் வாங்க உள்ளது.
  • பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த மலை ஏறும் வீரரான கென்டன் கூல் என்பவர், உலகின் மிக உயரமான மலையை 16வது முறையாக ஏறி, அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வெளிநாட்டு மலை ஏறும் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்