TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 13 , 2022 770 days 423 0
  • மாநிலத்தில் உள்ள வளமான நிலங்களை பாலைவனமாக்கும் சில நடவடிக்கைகளை நிறுத்தி, அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் மண்ணைக் காப்பாற்றுவதற்காக ராஜஸ்தான் அரசானது ஈஷா அவுட்ரீச் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
    • குஜராத்தை அடுத்து, இந்த அறக்கட்டளையுடன் இத்தகையப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது இந்திய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.
  • இன்ஸ்டாகிராம் ஊடகத்தில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமையை இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றார்.
  • வாட்ஸப் நிறுவனமானது, வாட்ஸப் வணிக செயலி  போன்ற டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்த உதவுவதன் மூலம் சிறு வணிகங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள SMBSaathi Utsav என்ற ஒரு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
  • நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறை வங்கிகளுக்கான EASE 5.0 (மேம்படுத்தப் பட்ட அணுகல் மற்றும் சிறப்புச் சேவை) ‘பொதுச் சீர்திருத்தச் செயல்பாட்டு நிரலை’ வெளியிட்டார்.
  • மும்பையில் உள்ள சர்வதேச விளையாட்டு மற்றும் மேலாண்மை நிறுவனமானது (IISM), வினித் கர்னிக் எழுதிய “Business of Sports: The Winning Formula for Success” என்ற தலைப்பிலான விளையாட்டுத் துறையில் சந்தைப்படுத்துதல் குறித்த இந்தியாவின் முதல் புத்தகத்தை வெளியிட்டது.
  • மாருதி சுஸுகி இந்தியா ஹரியானாவில் உள்ள மனேசரில் அமைந்துள்ள தனது உற்பத்தி அலகில் 20 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தியினால் இயங்கும் கார் நிறுத்தத்தினை நிறுவியுள்ளது.
    • பிசினஸ் இதழின் ஒரு அறிக்கையின்படி, இது ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு கார் நிறுத்தம் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய BPM (வணிக செயல்முறை மேலாண்மை) சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் பட்டியலில் TCS நிறுவனம் தனது பத்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்