TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 25 , 2022 758 days 388 0
  • உள்துறை அமைச்சகமானது இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு  (சைபர் அப்ராத் சே ஆசாதி, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) குறித்த ஒரு தேசிய மாநாட்டினை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் அமைக்கப் பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட உள்ள பாக்சி பார்த்தசாரதி பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
  • பெங்களுருவில் டாக்டர் B.R. அம்பேத்கர் பொருளியல் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • பாஷ் மித்து என்பது இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித் தலைவரான மித்தாலி ராஜின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும்.
  • இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்காக நடத்தப்பட்டத் தேசிய இராணுவ அகாடமி தேர்வில் ஷனன் டாக்கா என்பவர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக ருச்சிரா கம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான லிசா ஸ்தலேகர் சர்வதேசக் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்