TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2022 756 days 474 0
  • பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கியா என்ற நிறுவனத்தின் நாகச்சந்திரா காணகத்தினை (ஷோரூம்) கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
    • ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் அமைக்கப் பட்டுள்ள இந்தக் கடையானது இந்தியாவில் அமைந்துள்ள ஐக்கியா நிறுவனத்தின் மூன்றாவது விற்பனை நிலையமாகும்.
  • ONGC விதேஷ் லிமிடெட் நிறுவனமானது, கொலம்பியாவில் உள்ள உர்ராக்கா என்ற துளையிடப்பட்ட கிணற்றில் எண்ணெய் இருப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
  • மத்தியப் புலனாய்வு வாரியத்தின் புதிய தலைவராக தபன் டேகா நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவரது நியமனமானது அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப் பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் S.S.முந்த்ராவைப் பங்குச் சந்தை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிப்பதற்குப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்