TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 29 , 2022 754 days 380 0
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தற்காலிகத் தலைவராக அனில் கண்ணா என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • கர்நாடக மாநிலத்தின் கப்பன் பூங்காவிலுள்ள ஜவஹர்லால் பால் பவனில் அமைக்கப் பட்டுள்ள ஊனமுற்றோருக்கு ஏற்ற வகையிலான முதல் பூங்காவானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
  • ஹெர்மிட் என்பது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்பாட்டு மென்பொருளைக் கொண்ட சாதனங்களைப் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஸ்பைவேர் (ஒற்றியறி மென்பொருள்) ஆகும்.
  • ஈரான் சமீபத்தில் "சுல்ஜானா" என்ற திட எரிபொருள் ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
    • இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட கலப்பின எரிபொருள் கொண்டு இயக்கப் படும் ஒரு செயற்கைக் கோள் ஏவுகலன் ஆகும்.
  • டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனமானது, கேரளாவின் காயம்குளத்தின் காயல் (உப்பங்கழி) பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய 101.6 மெகாவாட் அளவு பீக் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தித் ஆலையினை அமைக்க உள்ளது.
    • மின் கொள்முதல் ஒப்பந்தம் என்ற வகையின் மூலம் ஒரு மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்த ஆலையை நிறுவுதல் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
  • சென்னை தரமணியில் டைடல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கானச் சிறப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
    • இது இந்தியாவின் இம்மதிரியிலான முதல் சிறப்பு மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்