TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2022 976 days 449 0
  • இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரவோம் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் M.J. ஜேக்கப் (82) பின்லாந்தின் தாம்பியரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 80 மீட்டர் தடை ஓட்டப் போட்டிகளில், இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • பீகார் சட்டமன்றக் கட்டிடத்தின் ஒரு நூற்றாண்டு விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பீகார் சட்டமன்றக் கட்டிடத்தின் ஒரு நூற்றாண்டு நினைவுத் தூணினைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • ஸ்ரீநகரின் சோன்வார் பகுதியில் உள்ள கோவிலில் அமைந்துள்ள சுவாமி ராமானுஜா ச்சாரியாரின் ‘அமைதியைக் குறிக்கும் சிலையை' மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
  • மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, 75 சுதந்திரப் போராட்ட வீரர்களையும் கொண்டாடுகின்ற, அவர்கள் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ‘சுவாதிநாத சங்க்ராம் நா சர்விரோ’ என்றப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

 

2165 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top