ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 22 ஆம் தேதியன்று மாம்பழங்களைக் கொண்டாடும் வகையில் தேசிய மாம்பழத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
எல்தோஸ் பால், அமெரிக்காவில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டல் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆனார்.
நீரஜ் சோப்ரா, அமெரிக்காவில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கத்தினை வென்று வரலாறு படைத்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற முதல் இந்தியராக இவர் உருவெடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசியப் பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது, மென் ரகப் பொருட்களின் (CASM) வேதியியல் மற்றும் பயன்பாடுகள் குறித்த சர்வதேச மாநாட்டினை நடத்த உள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனையான வசிஃபா நஷ்ரீன், இரண்டாவது உயரிய மலைச் சிகரமான K2 சிகரத்தில் ஏறிய முதல் வங்காளதேச நபர் என்ற பெருமையைப் பெற்றார்.