TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 1 , 2022 721 days 474 0
  • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற கிரேக்க-ரோமன் 17 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 32 ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சூரஜ் வசிஷ்ட் பெற்றார்.
  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது, தற்போது விடைபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது முன்னோடிகளின் சில அரிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் நடத்தப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கும் Paytm  நிறுவனத்திற்குப் பதிலாக இனி மாஸ்டர்கார்டு நிறுவனம் நிதி வழங்கீட்டு நிறுவனமாகச் செயல்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, பொது வைப்புத்தொகையை ஏற்காமல், வங்கி சாராத நிதி நிறுவனத்தின் (NBFC) வணிகத்தைத் தொடங்குவதற்கு  பிரமல் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் ஒரே மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களை 75 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியது.
    • இது வட்டி விகிதத்தைச் சுழியம் என்ற நிலையில் இருந்து 2.25 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரையிலான வரம்பு வரையில் உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்