TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2022 720 days 470 0
  • தேசியச் சட்டச் சேவைகள் ஆணையம், தகுதியான கைதிகளை அடையாளம் கண்டு, விசாரணை மறு ஆய்வுக் குழுவிடம் கொண்டுச் செல்வதற்குத் தகுதியான நபர்களை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்வதற்காக வேண்டி ‘Release UTRC@75’ என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • மாவட்டச் சட்டச் சேவைகள் ஆணையத்தின் (DLSA) முதலாவது தேசிய அளவிலான சந்திப்பினைத் தேசியச் சட்டச் சேவைகள் ஆணையம் (NALSA) ஏற்பாடு செய்துள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்திய விருந்தோம்பல் இல்லத்தினை அமைக்க உள்ளது.
  • மக்கள் கடத்தப்படுவது பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு வழங்குவதற்காக, ஆட் கடத்தலுக்கு எதிரான உலக தினமானது ஜூலை 30 ஆம் தேதியன்று கடைபிடிக்கப் பட்டது.
    • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகம்" என்பதாகும்.
  • சர்வதேச நட்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இந்தியாவில் இந்தத் தினம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.
  • உலக வனச் சரகர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "வனச் சரகர்கள் பன்முகத் தன்மைக்கு அந்நியமானவர்கள் அல்ல" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்