TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2022 699 days 369 0
  • சர்வதேச கூடைப்பந்துக் கூட்டமைப்பின் ​​18 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியினைப் பெங்களூரு நடத்தவுள்ளது.
  • 17வது பிரவாசி பாரதிய திவாஸ் (2023) என்பது அடுத்த ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதி அன்று இந்தூரில் நடைபெறும்.
  • மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான இந்தியப் பாராளுமன்றக் குழு கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் என்னுமிடத்தில் நடைபெறும் 65வது காமன் வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளது.
  • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மனிஷா கல்யாண், UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியக் கால்பந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
  • இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “Bibi: My Story” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்